/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் தாழ்வாக தொங்கும் கேபிள் ஒயரால் விபத்து
/
ரோட்டில் தாழ்வாக தொங்கும் கேபிள் ஒயரால் விபத்து
ADDED : மே 21, 2025 05:22 AM

போக்குவரத்து இடையூறு
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரன், திண்டுக்கல்.
..........----------விதிமீறலால் விபத்து
எரியோடு - திண்டுக்கல் ரோட்டில் டூவீலரில் அதிக அளவில் பொருட்களை கட்டி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .ரோட்டை மறைத்து சொல்வதால் எதிரே வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து நடக்கிறது. விமல்குமார், எரியோடு.
.....---------கேபிள் ஒயால் விபத்து
திண்டுக்கல் ராம்நகரில் கேபிள் ஒயர் ஆங்காங்கே தாழ்வாக கிடப்பதால் விபத்து நடக்கிறது .ரோட்டில் குறுக்கே தொங்கிட்டு உள்ளதால் அடிக்கடி விபத்தும் நடக்கிறது கேபிள் ஒயரை ஒழுங்குபடுத்த நடவடிக்கை வேண்டும்.பாலமுருகன், ராம்நகர்.
.............---------சரிசெய்ய வேண்டும்
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.இதனால் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் .தண்ணீருடன் கழிவுகளும் கலக்கிறது. உடைந்த பகுதியை சரிசெய்ய வேண்டும். நித்யா, எம்.வி. எம். நகர்.
..............----------
மின் பெட்டியால் விபத்து
ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறை ஊராட்சி இந்திரா நகரில் உள்ள குடிநீர் இணைப்பிற்கான மின் வினியாகப்பெட்டி சேதம் அடைந்த நிலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை சீரமைக்க வேண்டும். எம்.மயில்சாமி, இந்திராநகர்.
........---------சாக்கடையில் தண்ணீர் தேக்கம்
திண்டுக்கல் அங்கு விலாஸ் ரோடு இறக்கத்தில் சாக்கடை சேதமடைந்து தண்ணீர் தேங்கியுள்ளது. பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயமும் நிலவுகிறது . கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன் திண்டுக்கல்.
...............---------குப்பையால் சுகாதாரக் கேடு
பழநி வள்ளியப்பா கார்டன் ரேஷன் கடை அருகே பல நாட்களாக குவிந்துள்ள குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .ரேஷன் கடைக்கு வருபவர்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது .குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமுதா, பழநி.
..........-----------