/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடும் தூர மின்பெட்டியால் காத்திருக்கு ஆபத்து.....
/
தொடும் தூர மின்பெட்டியால் காத்திருக்கு ஆபத்து.....
தொடும் தூர மின்பெட்டியால் காத்திருக்கு ஆபத்து.....
தொடும் தூர மின்பெட்டியால் காத்திருக்கு ஆபத்து.....
ADDED : ஜன 15, 2024 04:36 AM

விபத்தை ஏற்படுத்தும் பயணம்
திண்டுக்கல்லில் ரோட்டோரங்களில் செல்லும் ஒருசில வாகனங்களில் அதிக அளவில் மூடைகளை ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி லோடு பொருட்கள் தொங்கியபடியே செல்வதால் பின்வரும் வாகனங்கள் அச்சத்துடன் செல்கின்றனர். அதிக பாரம் ஏற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாசன், திண்டுக்கல்.-------......
தொடும் துார மின்பெட்டியால் ஆபத்து
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே திறந்த நிலையில் மின் மீட்டர் பெட்டி உள்ளது. இந்த பெட்டியின் அருகே மழை நேரங்களில் மக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். தொடும் துாரத்திலிருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலச்சந்தர், திண்டுக்கல்.--------.......
சேதமான ரோடால் அவதி
பொரூளூரிலிருந்து குப்பாயிவலசுக்கு செல்லும் தார்ரோடு பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனால் ரோடுகள் முழுவதும் குண்டும் குழியுமாக மாறி டூவீலர்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். இரவில் செல்வோர் அச்சத்துடனே பணிப்பதால் அதிகாரிகள் ரோடை சீரமைக்க வேண்டும். முருகன், பொருளூர்.--------........
குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல் பள்ளப்பட்டி ரோட்டில் குப்பையை கொட்டி தீ வைக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை அடிக்கடி வருகின்றது. தொடரும் இப்பிரச்னையால் மக்கள் மூச்சித்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். குப்பையை எரிக்காமல் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும். அனுஷா, திண்டுக்கல்.--------.........
வீணாகும் குடிநீரால் பாதிப்பு
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தருமத்துப்பட்டி ஊராட்சியில் குடிநீர் வினியோகம் குறைவாக உள்ளது. சந்தைப்பேட்டை பகுதியில் திருகு குழாய் இல்லாமல் குடிநீர் வீணாக லிட்டர் கணக்கில் வெளியேறுகிறது. ஊராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். -ஆனந்த், தருமத்துப்பட்டி.---------.........
இரும்பு தகடுகள் திருட்டு
எரியோட்டிலிருந்து பண்ணைப்பட்டி செல்லும் ரோட்டில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இங்கு மழை நீர் வேளியே செல்ல இருதிசையிலும் இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டது. இவற்றில் சில திருடு போனதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. இதை சீரமைக்க வேண்டும். - ராமசாமி, தென்னம்பட்டி.
-----------..........
தொற்று பரப்பும் கழிவுநீர்
நத்தம் பிள்ளையார்நத்தம் ஊராட்சி கோட்டைப்பட்டி பகுதியில் வீடுகள்,கடைகளிலிருந்து வரும் கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. ஆக்கிரமிப்பில் இருப்பதால் இந்நிலை தொடர்கிறது. கழிவுநீர் இங்கு நாட்கணக்கில் தேங்கி தொற்று பரப்பும் வகையில் உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முருகபாண்டி, கோட்டைப்பட்டி.
............................................................
----------