/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
/
குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை பிடித்த வனத்துறையினர்
ADDED : ஏப் 23, 2025 03:18 AM

கோபால்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் -சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்திய குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் தெரு, ரைஸ் மில் தெரு, பெருமாள் கோவில் தெரு, புது தெரு, ஏழுமலையான் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் குரங்குகள் சுற்றித்திரிந்தன. இவைகளால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டது. ஏப்ரல் 16 ல் அதே பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி குரங்குகள் தாக்கியதில் படுகாயமடைந்தார். இதை தொடர்ந்து சிறுமலை வனசரகர் மதிவாணன் உத்தரவில் வானவர் பாண்டி, காமேஷ் உள்ளிட்டோர் வேம்பார்பட்டி பகுதியில் முகாமிட்டனர். கூண்டு வைத்து 24 குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.