/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
/
ரோடு அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
ADDED : பிப் 17, 2026 07:07 AM

மலைக்கிராமத்தினர் போராட்ட எச்சரிக்கை
தாண்டிக்குடி: ரோடு அமைக்க வனத்துறை முட்டுக்கட்டையாக உள்ளதால் இதை கண்டித்து தாண்டிக்குடி கூடம்நகர் கிராமத்தினர் போராட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாண்டிக்குடி ஊராட்சி கூடம் நகரில் ஏராளமானோர் வசிக்கின்றனர். அத்யாவசிய தேவை, மருத்துவம், விளை பொருள் சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கு பண்ணைக்காடு ரோட்டை பயன்படுத்துகின்றனர். 9. கி.மீ., தொலைவில் 4 கி.மீ., வனத்துறை பொறியியல் பிரிவு மூலம் ரோடும் மீதமுள்ள 5 கி.மீ., குண்டு, குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் நாள்தோறும் கிராமத்தினர் அவதியடைவதோடு வாகனங்களும் பழுதாகின்றன.
ரோடு அமைக்க கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.4 கோடி 89 லட்சத்தில் ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
முதற்கட்டமாக சேதமடைந்த ரோட்டை இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணி நடந்தது.
வனத்துறை தங்கள் இடத்தில் ரோடு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ரோடு அமைக்க முட்டுக்கட்டையிட்டது.
இதனால் ரோடு பணி பாதித்தது. இதற்கிடையே வனத்துறையினர் பண்ணைக்காடு நுழைவாயிலில் ஒரு செக்போஸ்ட் அமைத்த நிலையில் தற்போது இரட்டை போஸ்ட் அருகே மேலும் ஒரு செக்போஸ்ட்டை அமைத்து பொதுமக்கள், அத்யவாசிய பொருட்களை வாகனங்களில் கொண்டு வர கெடுபிடி செய்கின்றனர். வனத்துறையின் செயல்பாட்டை கண்டித்து கிராமத்தினர் துவக்கத்தில் மறியல் செய்தனர்.
அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில் மேலும் போராட்டம் நடத்தப்படும் என போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
விவசாயி கணேசன் கூறுகையில் ''ரோடு அமைக்க வனத்துறை முட்டுக்கட்டையாக உள்ளது. ரோடு அமைக்க இயந்திரம், தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனர்.
ரோடு அமைக்கும் பணியில் தற்போதைய உதவி வனப்பாதுகாவலரின் அராஜகப் போக்கால் தாங்கள் பாதித்துள்ளோம்'' என்றார்.

