/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருப்பு சேலை அணிந்து போராட்டம்
/
கருப்பு சேலை அணிந்து போராட்டம்
ADDED : பிப் 17, 2026 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், பணிக்கொடை ரூ.10லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
14ம் நாளாக நேற்று போராட்டம் தொடர்ந்தது.
இதில் கருப்பு சேலை அணிந்து அனைவரும் பங்கேற்றனர். ஐ.சி.டி.எஸ். ஊழியர், உதவியாளர் சங்க பொறுப்பாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில இணை செயலாளர் இந்திரா, ஓய்வூதியர்கள் சங்க செயலாளர் செல்வராஜ், காளிமுத்து கலந்துகொண்டனர்.

