/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செவிலியர் மாணவிகள் உண்ணாவிரதம்
/
செவிலியர் மாணவிகள் உண்ணாவிரதம்
ADDED : பிப் 17, 2026 07:03 AM
திண்டுக்கல்: தமிழக மருத்துவ தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட கிராம சுகாதார செவிலியருக்கான அறிவிப்பில் அம்பிளிக்கை கிறிஸ்தவ செவிலியர் கல்லுாரியில் ஏ.என்.எம்.ஆக ஒருவர் கூட தேர்வு செய்யவில்லை.
அதிக மதிப்பெண்கள் பெற்றும் கிராம சுகாதார செவிலியருக்கான கலந்தாய்வில் மாணவிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தகுதி உள்ள மாணவிகள் அனைவருக்கும் கிராம சுகாதார செவிலியர் அரசு பணி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
இதற்கு தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாக செவிலியர் கல்லுாரி மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டத்தலைவர் தீபக்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் நிரூபன் பேசினார்.

