/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வனத்திற்குள் செல்லாதீர் வனத்துறை எச்சரிக்கை
/
வனத்திற்குள் செல்லாதீர் வனத்துறை எச்சரிக்கை
ADDED : ஆக 29, 2025 03:34 AM
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே வரதா பட்டினம் வனப் பகுதியில் உள்ள கோயில், தர்காவிற்கு செல்ல தகுந்த அனுமதி பெற்று செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரதாபட்டினம் வனப்பகுதி கோயில், தர்காவிற்கு ஆன்மிக பயணம் செல்ல, பொழுதுபோக்கிற்காக செல்ல வனத் துறையிடம் தகுந்த அனுமதி பெற வேண்டும். வனப்பகுதிக்குள் மது பாட்டில், பீடி, சிகரெட், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை உபயோகப்படுத்தி விட்டு வனப்பகுதி மண்வளத்தை சீர்கெடுக்கின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மனித, விலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்க வனத்துறை அனுமதி இன்றி வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என பாறைகளில் எழுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.