/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
/
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
ADDED : மார் 03, 2024 06:32 AM

திண்டுக்கல்: ''தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. ஆட்சி குறித்து வீடு வீடாக சென்று தெரிவியுங்கள் ,'' என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி, மகளிர் ,மாணவர் அணி சார்பில் நடந்த லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர் கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என நாள்தோறும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் போதை பொருள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தியதில் தி.மு.க., நிர்வாகி கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. பல கோடியிலான போதை பொருள் கடத்தப்பட்டுள்ளது.தி.மு.க., அரசினால் இளைய தலைமுறை சீர்கெட்டு வருகிறது.
ரூ 10,000 வைத்து குடும்பம் நடத்தியவர்கள் ரூ.25 ஆயிரம் இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற அளவிற்கு தி.மு.க., ஆட்சி தமிழக மக்களை தள்ளிவிட்டுள்ளது என்றார். அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.