/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அண்ணனை வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்: வைரலாகும் வீடியோ
/
அண்ணனை வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்: வைரலாகும் வீடியோ
அண்ணனை வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்: வைரலாகும் வீடியோ
அண்ணனை வெட்டிய முன்னாள் ராணுவ வீரர்: வைரலாகும் வீடியோ
ADDED : ஆக 13, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைரோடு; திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கட்டகூத்தன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பொன்னையன் 76. இவரது தம்பி முன்னாள் ராணுவ வீரர் சங்கன் 74. அண்ணன் தம்பி இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் பூர்வீக சொத்தில் 6 சென்ட் நிலத்தை பொன்னையன் விற்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கன் அண்ணனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது கையில் வைத்திருந்த அரிவாளால் பொன்னையனை வெட்டினார். பொன்னையன் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து சங்கனை போலீசார் கைது செய்தனர்.