UPDATED : அக் 09, 2026 07:42 PM
ADDED : அக் 09, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே முயல் வேட்டையாடிய நால்வரை கைது செய்த வனத்துறையினர் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
வத்தலகுண்டு வனச்சரகம் நடகோட்டை பிள்ளையார்நத்தம் கண்மாய் பகுதியில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முயல் வேட்டையாடிய கரூர் மாவட்டம் குளித்தலை, பொருந்தலுாரை சேர்ந்த கார்த்திக் 30, வெள்ளைச்சாமி 32, சக்திவேல் 30, தொப்பநாயக்கனுார் கிருஷ்ணமூர்த்தி 30, ஆகிய நால்வரை கைது செய்தனர்.
வேட்டையாடப்பட்ட முயல், அதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி நால்வருக்கும் தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
