UPDATED : அக் 09, 2026 07:42 PM
ADDED : அக் 09, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரையில் இருந்து 5 ஊர்களுக்கு மினி பஸ்கள் இயக்க தடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது.
வடமதுரையில் இருந்து ம.மூ.கோவிலுார், அய்யலுார் முதல் ஆலம்பட்டி, அயினாம்பட்டி முதல் எரியோடு, தென்னம்பட்டி முதல் வேடசந்துார், பூசாரிபட்டி முதல் எரியோடு என வழித்தடங்கள் மினி பஸ் சேவைக்காக தேர்வு செய்யப்பட்டது.
இவ்வழித்தடம் அறிவிக்கப்பட்டு ஓராண்டிற்கு மேலாகியும் மினி பஸ்கள் ஏதும் இயக்கப்படாமல் திட்டம் கிடப்பில் உள்ளது. இப்பகுதியில் மினிபஸ் சேவைகள் துவங்கினால் ஏராளமான கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுவர்.
