ADDED : பிப் 08, 2025 05:28 AM
திண்டுக்கல்: ஜெம் மருத்துவமனை சார்பாக திண்டுக்கல் சிவராஜ் குழும ஆலைகள் சென்னிஸ் ஷோரும், எஸ்.எஸ்.எம். பள்ளிகள் இணைந்து அனைத்து நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகில் டட்லி மேல்நிலைப்பள்ளி நாளை(பிப்.9) காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
மேயர் இளமதி தலைமையில் நிர்வாக இயக்குநர் சிவராஜ் ,குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரத்குமார் முன்னிலையில் கோவை ஜெம் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
முகாமின் சிறப்பம்சமாக ஸ்கேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி பரிசோதனைகள் முகாம் நடக்கும் இடத்திலே இலவசமாக செய்யப்படுகிறது.
பரிசோதனை செய்ய விரும்புபவர்கள் காலை உணவு அருந்தாமல் வெறும் வயிற்றில் வரவும். அறுவை சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 50 சதவீத சிறப்பு சலுகை வழங்கப்படும். இலவச முன்பதிவிற்கு 90039 32323,98423 02485.