/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் இன்று இலவச மருத்துவ பரிசோதனை
/
பழநியில் இன்று இலவச மருத்துவ பரிசோதனை
ADDED : ஜூலை 27, 2025 04:27 AM
திண்டுக்கல்: பழநி காமராஜர் திருமண மண்டபத்தில் ஜெம் மருத்துவமனை, பழநி சேம்பர் ஆப் காமர்ஸ், கோவை அரண் பணி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று(ஜூலை 27) நடக்கிறது.
கல்லீரல், கணையம், பித்தப்பை சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள், மஞ்சள் காமாலை, குடலிறக்கம், ஆசனவாய், கர்ப்ப பை கோளாறுகள், ஓவரிக்கட்டிகள், குடல் நோய்களுக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளலாம்.
மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அனிதா ராஜ்மோகன், ஜெம் மருத்துவமனை டாக்டர் நலங்கிள்ளி முன்னிலையில் காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
ஸ்கேன், எண்டோஸ்கோப்பி, தேவைப்படுவோருக்கு மட்டும் இலவசம். ஸ்கேன் பரிசோதனைக்கு வெறும் வயிற்றில் வர வேண்டும். கலந்து கொள்ளும் அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசம். அறுவை சிகிச்சைக்கு 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும். முன்பதிவு விவரங்களுக்கு 73589 10515, 96264 35665 ல் தொடர்பு கொள்ளலாம்.