ADDED : பிப் 09, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெட்டியார்சத்திரம்,: சின்னாளபட்டி செந்துார் முருகன் சாய் அறக்கட்டளை, திண்டுக்கல் ரமணா மருத்துவமனை சார்பில் ரெட்டியார்சத்திரம் அருகே அக்கரைப்பட்டியில் பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை நிர்வாகி ரகுநாதன் தலைமை வகித்தார்.
துணை செயலாளர் வினோபா ரங்கநாதன், காந்திகிராம பல்கலை பேராசிரியர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் ரமணா மருத்துவமனை தலைமை டாக்டர் மகாலட்சுமி, பாதயாத்திரை பக்தர்களுக்கான இலவச சிகிச்சை , ஆலோசனைகள் வழங்கி துவக்கி வைத்தார். பக்தர்களுக்கு மாதுளை, சாத்துக்குடி ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் வழங்கப்பட்டது.

