தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கந்த சஷ்டி பெருவிழா இன்று துவக்கம்

கந்த சஷ்டி பெருவிழா இன்று துவக்கம்

கந்த சஷ்டி பெருவிழா இன்று துவக்கம்


UPDATED : நவ 10, 2026 10:03 AM

ADDED : நவ 10, 2026 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:03 AM ADDED : நவ 10, 2026 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழா இன்று (நவ.,10) காப்பு கட்டுதலுடன் விமரிசையாக துவங்குகிறது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா உடனுறை ஆறுமுக பெருமானுக்கு காலை9:00 மணிக்கு காப்பு கட்டி விழா துவங்குகிறது. மாலை சிறப்பு அபிஷேக,ஆராதனைகள், உற்ஸவ மூர்த்தி திருவீதிஉலா நடக்கிறது. இன்று கேடயத்தில் சுவாமிபுறப்பாடு நடக்கிறது.

நவ.,11ல் ஆட்டுக்கிடாய், நவ.,12ல் மயில் வாகனம், நவ.,13ல் குதிரை வாகனம், நவ.,14ல் சிம்ம வாகனம், நவ.,15ல் சூரசம்ஹார மயில் வாகனம் புறப்பாடு, நவ.,16 காலை பாவாடை நைய்வேத்தியம், மாலை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. நவ.,17ல் மயில் வாகனபுறப்பாடு, நவ.,18ல் திருநாள் விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதுபோல் திண்டுக்கல் –திருச்சி ரோடு என்.ஜி.ஓ., காலனி பாலதண்டாயுபாணி கோயிலில் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்குகிறது.

ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதாபிரியதர்ஷினி,துணை கமிஷனர் சுரேஷ், செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

திண்டுக்கல் கூட்டுறவு நகர் செல்வ விநாயகர்கோயில், ஒய்.ஆம்.ஆர்.,பட்டி பாலசுப்பிரமணியர் கோயில், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்குகிறது.

பக்தர்களும் காப்பு கட்டி தங்களது விரதத்தை துவங்குகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us