/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'நாக்' தரத்திற்கு காந்திகிராம பல்கலை ஆயத்தம்
/
'நாக்' தரத்திற்கு காந்திகிராம பல்கலை ஆயத்தம்
ADDED : ஜூன் 11, 2025 01:00 AM
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை, 'நாக்' கமிட்டியின் தர ஆய்விற்காக ஆயத்தமாகி வருகிறது.
தேசிய தர நிர்ணய குழுமம் காந்திகிராம பல்கலையில் ஜூன் 16, 17, 18 ல் ஆய்வு நடத்த உள்ளது. நேரடி,இணையம் வழியாக நடக்க உள்ள ஆய்வின் போது, கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்கம், நிர்வாகம் உள்ளிட்ட 7 பரிமாணங்கள் சார்ந்த அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன.
2019 முதல் 2024 வரையான காலத்தில் பல்கலையின் செயல்பாடுகள், சாதனைகள் உள்ளிட்டவை ஆய்விற்கு உட்படுத்தப்படும். இது தவிர ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துணைவேந்தர் பஞ்சநதம் கூறுகையில், நாக் கமிட்டியின் ஆய்வில் உச்சபட்ச புள்ளிகளை பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிக புள்ளிகளுடன் உயர்தர மதிப்பீட்டை இப்பல்கலை பெறும்'' என்றார்.