/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கீதா டிம்பர்ஸ் இல்ல திருமண விழா
/
கீதா டிம்பர்ஸ் இல்ல திருமண விழா
ADDED : பிப் 03, 2025 05:47 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கீதா டிம்பர்ஸ் உரிமையாளர் ஆர்.ரமேஷ்பட்டேல், ஹென்ஷா தம்பதியின் மகன் மனோகருக்கும் பொள்ளாச்சி ரமேஷ்- ஹென்ஷா தம்பதியின் மகள் பூஜாவுக்கும் திருமணம் நடந்தது.
இவர்களின் திருமண வரவேற்பு விழா திண்டுக்கல்- தேனி ரோடு பிள்ளையார்நத்தம் பிரிவில் உள்ள சிட்டி ஸ்கொயர் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் பெரியசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜ், எம்.எல்.ஏ., காந்திராஜன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராகவன், வர்த்தக சங்கத் தலைவர் ஜி.சுந்தரராஜன், ஜி.டி.என்., குழுமம் தலைவர் ரெத்தினம், நாட்டாண்மை காஜாமைதீன், அரசன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் சண்முகம், ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர்கள் கலையரசன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், தொழிலதிபர் மைனர் ராமச்சந்திரன், மேற்கு தொடர்ச்சி சங்கத் தலைவர் புருஷோத்தமன், லக்சர் வேர்ல்டு பள்ளி இயக்குனர் சுவாமிநாதன், அம்மன் ஜூவல்லரி உரிமையாளர் மனோகரன், தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜெயன், ஹைடெக் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பாரூக், ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் இயக்குனர் தினேஷ் பங்கேற்றனர்.