sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' பசுமை பள்ளத்தாக்கில் குப்பை

/

'கொடை' பசுமை பள்ளத்தாக்கில் குப்பை

'கொடை' பசுமை பள்ளத்தாக்கில் குப்பை

'கொடை' பசுமை பள்ளத்தாக்கில் குப்பை


ADDED : பிப் 19, 2024 05:58 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல : கொடைக்கானல் பசுமை பள்ளத்தாக்கில் குவிந்த குப்பையால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர். இதன்மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் நகராட்சி பராமரிப்பில் உள்ள பசுமை பள்ளத்தாக்கு. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இப்பகுதியிலிருந்து வெள்ள கெவி கிராமம் ,தரைப்பகுதி மாவட்டம்,மலைப்பகுதிகளின் ஆழமான பள்ளதாக்கு பகுதிகளை இங்கிருந்து ரசிக்கலாம். துவக்கத்தில் தற்கொலை பாறை என அழைக்கப்பட்ட இவ்விடம் பின் பசுமை பள்ளத்தாக்கு என மாற்றப்பட்டது. வருகை தரும் சுற்றுலா பயணிகள் பள்ளதாக்கு இயற்கை காட்சிகளை ரசித்துச் செல்கின்றனர். இருந்த போதும் பசுமை பள்ளத்தாக்கில் பயணிகள் பாதுகாப்பிற்காக வேலி அமைத்துள்ளனர். இதன் முன்பகுதியில் சுற்றுலா பயணிகள்,இங்கு கடை வைத்திருப்பவர்கள் குப்பைகளை வீசுவதால் பள்ளதாக்கு பகுதியை பார்வையிடும் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இப்பகுதியில் இது போன்ற நிலை பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது. நகராட்சி குவிந்துள்ள குப்பைகளை அகற்றி துாய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us