ADDED : செப் 28, 2024 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அன்னை தெரசா மகளிர் பல்கலை உட்பட்ட 13 கலை கல்லுாரிகளில் ஹாக்கி போட்டி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தொடங்கி வைத்தார்.
இறுதி போட்டியில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை , தாமரைப்பாடி புனித அந்தோணியார் கல்லுாரியை 4:0 என்ற கோல் கணக்கில் வென்று முதல் பரிசை பெற்றது.
ஹாக்கி திண்டுக்கல் அமைப்பின் தலைவர் காஜாமைதீன் பதக்கம் அணிவித்து பாராட்டினார். ராஜம், செயலாளர் ராமனுஜம், பயிற்சியாளர் பிரிட்டோ, அன்பு மேரி பங்கேற்றனர்.