/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யலுாரில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை
/
அய்யலுாரில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை
அய்யலுாரில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை
அய்யலுாரில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை
ADDED : மார் 21, 2025 02:01 AM

வடமதுரை:ரம்ஜான், பங்குனி திருவிழா எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலுாரில் நடந்த வாரச்சந்தையில் ரூ.1.50 கோடி மதிப்பில் ஆடுகள், கோழிகள் விற்பனையாயின.
அய்யலுாரில் வியாழன்தோறும் கூடும் வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனையும் அதிகம் நடக்கிறது. தற்போது ரம்ஜான், பங்குனி கோயில் திருவிழாக்கள் நடப்பதால் இறைச்சிக்காக ஆடுகள் தேவை அதிகம் உள்ளது.
நேற்று வாரச்சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து காலை 9:00 மணிக்குள் முடிந்தது. வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகள் விற்பனை அதிகம் நடந்தது. நாட்டு கோழி கிலோ ரூ.450, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் கிலோ ரூ.700 என்ற அடிப்படையில் விற்பனை நடந்தது. நேற்று மட்டும் ரூ.1.50 கோடி அளவில் ஆடுகள், கோழிகள் விற்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.