ADDED : மார் 13, 2024 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு ஒய்.எம்.ஆர்.பட்டி கோபால் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி 80.
இவர் தாய்லாந்தில் நடந்த 80 வயது பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று முதல் இடத்தை பெற்று தங்க பதக்கம், தட்டு எறிதலில் 3ம் இடம் பெற்று வெண்கல பதக்கமும் வென்றார். ஆசிய தடகள போட்டிகளில் தொடர்நது பங்கேற்று சாதனை படைத்து வரும் இவர் பல நாடுகளில் 80 வயது பிரிவின் கீழ் நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்க்க ஆவலாக உள்ளேன். அரசு உதவாதது வேதனை அளிக்கிறது என்றார்.

