/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' ரோஜா பூங்காவில் கோல்டன் சைப்ரஸ் வளைவு
/
'கொடை' ரோஜா பூங்காவில் கோல்டன் சைப்ரஸ் வளைவு
ADDED : செப் 17, 2025 02:55 AM

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ரோஜா பூங்காவில் கோல்டன் சைப்ரஸ் செடிகளால் தோரண வளைவு அமைக்கப்பட்டு உள்ளது.
கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் தோட்டக்கலைத்துறை ரோஜா பூங்காவை அமைத்துள்ளது. 1500 வகையான ரோஜாக்கள், 15 ஆயிரம் செடிகள் உள்ளன. இங்கு பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை பயணிகள் ரசித்து செல்வர். தோட்டக்கலைத்துறை சார்பில் பயணிகளை ஈர்க்கும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் கோல்டன் சைப்ரஸ் செடிகளை நடவு செய்து பராமரித்தது.
அதை தோரண வளைவுகளாக நடைபாதையில் அமைக்க திட்டமிட்டது. செடிகள் நன்கு தளிர்த்து பசுமையாக காட்சியளித்த நிலையில் கவாத்து செய்து நடைபாதையில் தோரண வளைவாக அமைத்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் ரசித்தும் பின்னணியில் உள்ள இருக்கையில் அமர்ந்து புகைப்படம் எடுத்தும் பொழுதுபோக்கி வருகின்றனர். தோட்டக்கலைத் துறையின் இந்நடவடிக்கை சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.