/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயணிகளுடன் வந்தபோது நடுரோட்டில் வெடித்த அரசு பஸ் டயர்
/
பயணிகளுடன் வந்தபோது நடுரோட்டில் வெடித்த அரசு பஸ் டயர்
பயணிகளுடன் வந்தபோது நடுரோட்டில் வெடித்த அரசு பஸ் டயர்
பயணிகளுடன் வந்தபோது நடுரோட்டில் வெடித்த அரசு பஸ் டயர்
ADDED : நவ 20, 2024 05:20 AM

திண்டுக்கல் : நிலக்கோட்டையிலிருந்து பயணிகளை ஏற்றியப்படி திண்டுக்கல்லுக்கு வந்த அரசு பஸ் டயர் வெடித்து நடுரோட்டில் நின்றது.
பயணிகளை பாதியிலே இறக்கிவிட போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஏராளமான அரசு டவுன் பஸ்கள் சுற்று பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இவைகளில் அனைத்து பழைய பஸ்களாகவே உள்ளன.
இதனால் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு ரோட்டில் பயணிகளுடன் நிற்கும் நிலை தொடர்கிறது. இதுபோல் நேற்று நிலக்கோட்டையிலிருந்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு பயணிகளுடன் அரசு டவுன் பஸ் (தநா 57 நா 1375) புறப்பட்டது.
இந்த பஸ் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு அருகே வந்தபோது அதன்முன் பக்க டயர் வெடித்தது.
இதனால் பயணிகள்,அவ்வழியே சென்ற மக்கள் அச்சமடைந்தனர். பயணிகளும் நடுவழியில் இறக்கிவிட அவர்களில் பலர் நடந்தே சென்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் உடனே வராததால் பஸ் ரோட்டிலே நின்றது. இதனால் அவ்வழித்தடத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.