ADDED : பிப் 04, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட மகளிர் கருத்தரங்கம் மெங்கில்ஸ் ரோட்டிலுள்ள சங்க அலுவலகத்தில் மகளிர் துணைகுழு அமைப்பாளர் சுகந்தி தலைமையில் நடந்தது.
இணை அமைப்பாளர் ஜெசி வரவேற்றார். உறுப்பினர்கள் கல்பனா, ஜெயக்கொடி, மயில், ராஜாத்தி முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் செல்வராணி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசினர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களின் அடிப்படை பிரச்னைகள் பற்றிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 9ல் சென்னையில் மகளிர் மாநாடு நடத்த ஆலோசனை செய்யப்பட்டது. டி.என்.ஜி.இ.ஏ., தொழிற்சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி நன்றி கூறினார்.