/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு அலுவலர் சங்கத்தினர் மறியல்; 260 பேர் கைது
/
அரசு அலுவலர் சங்கத்தினர் மறியல்; 260 பேர் கைது
ADDED : ஜன 08, 2025 06:25 AM
திண்டுக்கல் : 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.
பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், பதவி உயர்வினை காலதாமதமின்றி ஏற்படுத்துதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 260பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை வகித்தார். செயலர் எழில்வளவன், மாநில செயலர் ராஜசேகரன் பேசினர்.