/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்னாளபட்டி ரோடு பணியில் அரசு நிதி ரூ.5 கோடி வீண்
/
சின்னாளபட்டி ரோடு பணியில் அரசு நிதி ரூ.5 கோடி வீண்
சின்னாளபட்டி ரோடு பணியில் அரசு நிதி ரூ.5 கோடி வீண்
சின்னாளபட்டி ரோடு பணியில் அரசு நிதி ரூ.5 கோடி வீண்
ADDED : ஜன 20, 2025 05:54 AM

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சமீபத்தில் ரூ.5 கோடியில் ரோடு சீரமைப்பு நடந்தது. பெயரளவு நடந்த பணி பலனளிக்காமல் மக்களை அவதிக்குள்ளாக்குகிறது.
திண்டுக்கல் - -மதுரை 4 வழிச்சாலையில் சின்னாளபட்டி விலக்கு சந்திப்பு முதல் பஸ் ஸ்டாண்ட் பேங்க் ரோடு பகுதிகளில் ரோடு விரிவாக்க பணி 2023 ஜனவரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் துவங்கியது.
சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான பணியில் ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் செல்வதற்கான அகலப்படுத்தப்பட்ட வடிகால் வசதியுடன் ரோடு விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.
தெருக்களிலிருந்து வரும் அசுத்த நீர் சேருவதற்கென வழித்தடம் ஏற்படுத்தவில்லை. பெயரளவில் கால்வாய் பணிகள் நடந்தது.
பல இடங்களில் வணிக நிறுவனங்களின் முன்பு அசுத்த நீர் தேங்குகிறது. அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளால் நெரிசல், நடுரோட்டில் தேங்கும் கழிவுநீர், சுகாதாரம் சார்ந்த பிரச்னைகளால் பலர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
சின்னாளபட்டி,இ.கம்யூ., நிர்வாகி, ராஜாமணி கூறியதாவது, சீரமைப்பு பணியை முறைப்படுத்த வலியுறுத்தியபோதும், அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். பெயரளவில் தரமற்ற கட்டுமான பணிகள் மேற்கொண்ட அதிகாரிகள் சரிவர கண்காணிக்கவில்லை. தெருக்கள் தோறும் சேகரமாகும் கழிவுநீர் பிரதான வாய்க்காலில் இணைவதற்கான வசதி ஏற்படுத்தாமல் சுவர் எழுப்பினர்.
ஆக்கிரமிப்பு அகற்றத்திலும் அலட்சியத்தால் குறுகலான பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகிவிட்டது.
ரூ. 5 கோடியில் தரமற்ற வடிகால் அமைத்துள்ளதால் ரோட்டில் வாகனங்களில் செல்வோரும் பாதசாரிகளும் அவதிக்குள்ளாகின்றனர். என்றார்.--