/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேடி உதவி செய்யும் அரசு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
/
தேடி உதவி செய்யும் அரசு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
தேடி உதவி செய்யும் அரசு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
தேடி உதவி செய்யும் அரசு அமைச்சர் ஐ.பெரியசாமி பெருமிதம்
ADDED : டிச 15, 2024 05:39 AM

கன்னிவாடி : தேடி உதவி செய்வதன் மூலம் தேவைகளை நிவர்த்தி செய்யும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கோனுாரில் புதிய ஊராட்சி கட்டடம், அங்கன்வாடி, துணை சுகாதார நிலைய கட்டடங்களை திறந்து வைத்த அவர் பேசியதாவது: குக்கிராமங்கள் கல்வி, குடிநீர், ரோடு, போக்குவரத்து உட்பட அனைத்து வசதிகளுடன் தன்னிறைவு பெற்றுள்ளதாக தரம் உயர்ந்து வருகின்றன. ஆத்துார் தொகுதி மக்களின் உயர்கல்விக்காக மேலும் பல கல்வி நிறுவனங்கள் வர உள்ளன.
ரெட்டியார்சத்திரத்தில் 10 கோடி ரூபாயில் நவீன வசதிகள் கொண்ட திருமண மண்டபம் ஏற்படுத்தப்படுகிறது. மக்களுக்காக பணி செய்கின்ற, தேடி உதவி செய்வதன் மூலம் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்றார். திட்ட இயக்குனர் திலகவதி தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், மலரவன், முன்னாள் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் வெள்ளைத்தாய் தங்கப்பாண்டியன் வரவேற்றார்.