/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நேரத்தை வீணடிக்காதீர்கள் மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை
/
நேரத்தை வீணடிக்காதீர்கள் மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை
நேரத்தை வீணடிக்காதீர்கள் மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை
நேரத்தை வீணடிக்காதீர்கள் மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை
ADDED : அக் 25, 2024 07:35 AM

கொடைக்கானல்: -''மாணவர்கள் அலைபேசியில் நேரத்தை வீணடிக்காமல் நேர மேலாண்மையையும், ஒழுக்கத்தையும் கடைபிடித்தால் வாழ்வில் உயரலாம்'' என கவர்னர்ரவி பேசினார்.
கொடைக்கானல் சங்கரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசியதாவது: அலைபேசியில் மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் நேர மேலாண்மையை தவறாது கடைபிடிக்க வேண்டும். உந்து சக்திகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு சுய ஒழுக்கம் வேண்டும். அதிகாலையில் படிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 மணி நேரம் நன்கு உறங்க வேண்டும். உழைப்பின்றி உயர்வு அமைவதில்லை. எனது வெற்றிக்கு பின்னால் எனது தாயின் உந்து சக்தி, அறிவுரை அமைந்துள்ளது.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நான் பசு மாடு வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் கவனத்தை செலுத்தி இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ளேன். மாணவர்கள் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் யோகாவில் குறைந்தது 1 மணி நேரம் ஈடுபட வேண்டும். கடின உழைப்பே வெற்றிக்கு காரணமாக அமையும். கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களை வாழ்வியலோடு ஒன்றிணைத்து விளையாட்டு போக்குடன் அணுக வேண்டும். தோல்வியிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு எழுச்சி அடைய வேண்டும்.
சரஸ்வதியை வணங்கி படிப்பை தொடங்க வேண்டும். சிறு குடும்பத்தில் பிறந்த நான் இந்த உயர் நிலையை அடைந்தது எனது குடும்ப அறிவுரையும், சரியான திட்டமிட்ட நேர மேலாண்மையை கடைப்பிடித்ததே ஆகும். தோல்வியை தோல்விடைய செய்ய வேண்டும் என்றார்.