/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பஸ் -- -கார் மோதி விபத்து : பெண் பலி
/
அரசு பஸ் -- -கார் மோதி விபத்து : பெண் பலி
ADDED : ஜன 20, 2024 05:24 AM

செம்பட்டி: செம்பட்டி ஆதிலட்சுமிபுரம் அருகே கார் மீது அரசு பஸ்- மோதிய விபத்தில் தினமலர் வத்தலக்குண்டு செய்தி சேகரிப்பாளர் ஸ்தானிகபிரபு மனைவி சத்தியபிரியா 42, இறந்தார். ஸ்தானிகபிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வத்தலக்குண்டு அருகே கீழக்கோயில்பட்டியை சேர்ந்தவர் ஸ்தானிகபிரபு 47. மனைவி சத்தியபிரியா 42. இரு மகன்கள் உள்ளனர். சத்தியப்பிரியாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் தனது காரில் ஸ்தானிகபிரபு திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
சிகிச்சை முடிந்து வத்தலக்குண்டு நோக்கி புறப்பட்டனர்.
ஸ்தானிகபிரபு காரை ஓட்டினார். மாலை 5:30 மணிக்கு திண்டுக்கல் -குமுளி ரோட்டில் செம்பட்டி ஆதிலட்சுமிபுரம் வந்த போது தேனியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. சத்தியபிரியா இறந்தார். அவ்வழியே வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
காயமடைந்த ஸ்தானிகபிரபுவை போலீஸ் காரில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். செம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.