ADDED : நவ 02, 2025 04:08 AM
வத்தலக்குண்டு: -கணவாய்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சரவணன் பங்கேற்றார். மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ. 3 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச பெருமாள், வாழ்வாதார திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, தாசில்தார் ஜெயபிரகாஷ், கலெக்டர் நேர்முக உதவியாளர் நாகேந்திரன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கொடி, பி. டி. ஓ.,க் கள் குப்புசாமி, முருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நாகராஜன், ரமேஷ் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் முத்துக்குமார் தீர்மானங்கள் வாசித்தார்.
தாண்டிக்குடி: காமனுார் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையடுத்து கிராம சபை கூட்டம் நடந்தது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் பாபு, பி.டி.ஓ., பிரபா ராஜமாணிக்கம், ஒன்றிய செயலாளர் ஐயப்பன் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்: மன்னவனுார் ஊராட்சியில் அடிப்படை பிரச்னை குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் தெரிவிக்க ஒன்றிய உயரதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. நேற்றும் கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் வராத நிலையால் பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டம் நடைபெறவில்லை.

