
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை எச்.என்.யு.பி.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
நாடார் தொடக்கபள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரப்ப செட்டியார் நினைவு மெட்ரிக் பள்ளி, தமியான் சி.பி.எஸ்.இ., பள்ளி, செந்தில் நர்சரி பிரைமரி பள்ளி, கருணை தான் தொடக்கப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன் துவக்கி வைத்தார். நாடார் தொடக்கப்பள்ளி செயலர் ராஜேந்திரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தனர். முதல்வர் குமரேசன் வரவேற்றார்.
நாடார் உயர்நிலைப் பள்ளிச் செயலர் வினேஷ்பிரபு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் முரளிதரன், மெட்ரிக் பள்ளி தாளாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

