நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பள்ளங்கியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் சரவணன் கலந்து கொண்டார்.
ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு, தாசில்தார் பாபு, பி.டி. ஒ.,க்கள் பாலமுருகன், பிரபா ராஜமாணிக்கம் கலந்து கொண்டனர். கோவில்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் கலங்கலாக சப்ளை செய்யப்படுவதாக புகார் அளித்தனர்.
கலெக்டர் சரவணன் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையாக குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தினார்.