sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வனத்துறை நடத்தாத குறைதீர் கூட்டங்கள் : குமுறும் விவசாயிகள்

/

வனத்துறை நடத்தாத குறைதீர் கூட்டங்கள் : குமுறும் விவசாயிகள்

வனத்துறை நடத்தாத குறைதீர் கூட்டங்கள் : குமுறும் விவசாயிகள்

வனத்துறை நடத்தாத குறைதீர் கூட்டங்கள் : குமுறும் விவசாயிகள்


ADDED : பிப் 14, 2025 05:44 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் நடத்தாத குறைதீர் கூட்டங்களால் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் குறைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வாரம் ஒருமுறை அந்தந்த வனச்சரக அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள விவசாயிகளை அழைத்து ரேஞ்சர்கள் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்.திண்டுக்கல் சிறுமலை, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், அய்யலுார், பழநி, கொடைக்கானல், அழகர்கோவில், வத்தலக்குண்டு, நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு, நெல், சோளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இப்பகுதிகள் அனைத்தும் வனப்பகுதியின் அருகில் இருப்பதால் அடிக்கடி யானை, காட்டுமாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கின்றனர். இதுபோன்ற குறைகளை தெரிவித்து சேதமான பயிர்களுக்கு இழப்பீடு பெறுவதற்காக விவசாயிகள் வனத்துறையை அணுகுகின்றனர். மாதம் ஒருமுறை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால் எல்லா மனுக்களுக்கும் அங்கு தீர்வு காணப்படுகிறதா என்று பார்த்தால் அது இல்லை என்பது தான் உண்மை . ஆர்.டி.ஓ.,தாசில்தார் அளவிலும் விவாயிகளுக்கென கூட்டம் நடத்தப்படுகிறது. அதிலும் வனத்துறை அலுவலர்கள் உறுப்பினர்களாக பங்கேற்கின்றனர். இதுமட்டுமில்லாமல் அந்தந்த வனச்சரக அலுவலகங்களில் ரேஞ்சர்கள் தலைமையில் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகளை அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிய வாரம் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த வனச்சரக அலுவலகத்திலும் இந்த கூட்டம் நடப்பதில்லை. இதனால் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து பாதிப்பை மட்டுமே சந்திக்கின்றனர். தங்கள் குறைகளை வெளியில் சொல்ல முடியாமலும் திணறுகின்றனர். பாதிப்புகளை தடுத்து அதற்கான நிவாரணம் பெறுவதற்கு அவர்களுக்கு எந்தவித வழிகாட்டல்களும் இல்லாமல் தடுமாறுகின்றனர். ஏதாவது பிரச்னை என்றால் மட்டும் வனத்துறை அலுவலர்கள் நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மற்றபடி அவர்கள் விவசாயிகளை நேரில் பார்ப்பதே அதிசயமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வனச்சரக அலுவலகங்களில் குறைதீர் கூட்டங்களை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

இருப்பதே தெரியாது


திண்டுக்கல் விவசாயி விக்னேஷ் தியாகராஜன் கூறியதாவது: பல பகுதிகளில் காட்டுமாடுகள் விவசாய நிலங்களுக்குள் சர்வசாதரணமாக புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. வனத்துறையிடம் பல புகார்களை கொடுத்துள்ளோம். விவசாயம் செய்யும் விவசாயிகளை அழைத்து அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். சேதமான பயிர்களுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் மாவட்ட வனத்துறை உயர் அதிகாரி கூறியதாவது: குறிப்பிட்ட எதாவது வனச்சரக பகுதியில் வன விலங்குகள் அதிகளவில் விவசாய நிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்படுகின்ற போது அந்த ஏரியாக்களில் உள்ள விவசாயிகளை அழைத்து வனச்சரக அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் நடத்துகிறோம். மற்றபடி ஆர்.டி.ஓ.,தாசில்தார்,கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் வனத்துறை சார்பில் பங்கேற்கிறோம். பயிர் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரும் பணியிலும் ஈடுபடுகிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us