ADDED : மார் 18, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான மார்ச் 16 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டத்தில் துப்பாக்கி உரிமம் பெற்ற உரிமதாரர்கள்சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

