ADDED : நவ 18, 2026 09:59 PM
அ நிறம் | அளவு
நத்தம்:
நத்தம் அருகே கலைநகர் பகுதியில் மா.கம்யூ., சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார். நத்தம் கலைநகரில் சேதமடைந்த ரோட்டை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கையெழுத்திட்டனர். நிர்வாகிகள் மணவாளன், முத்துராமலிங்கம், மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
