/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ்
/
ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ்
ADDED : நவ 22, 2024 04:52 AM
சின்னாளபட்டி: தினமலர் செய்தி எதிரொலியாக சின்னாளபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி விலக்கு பகுதியில் துவங்கி கஸ்துாரிபா மருத்துவமனை, பூஞ்சோலை, ஆஞ்சநேயர் கோயில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தனியார் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. டூவீலர்களை கண்ட இடங்களில் நிறுத்துவது ,ரோட்டோர கடைகள் போன்றவற்றால் வாகன போக்குவரத்தில் நெரிசல், விபத்துக்கள் தொடர்கிறது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து ஆத்துார் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரோட்டார தற்காலிக கடைகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கி டிச. 3க்குள் அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் டிச.10ல் போலீஸ், வருவாய், பேரூராட்சிகள் துறையினர் முன்னிலையில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.