ADDED : பிப் 17, 2025 05:17 AM
திண்டுக்கல் : திருச்சி தக்ஷன பாரத் ஹிந்தி பிரசார சபா சார்பில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் பள்ளியில் ஹிந்தி தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஹிந்தி மொழியை படித்த 910 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவர்கள் தேர்வு எழுத திண்டுக்கல்லில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
தேர்வுக்காக விண்ணப்பித்து இருந்த 910 -மாணவிகளும் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்து தேர்வு எழுதினர். பிராத்மிக் தேர்வை 449 பேர் எழுதினர். காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடந்தது. மத்தியமா, ராஷ்டிரபாஷா ஆகிய தேர்வுகள் காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை முதல் கட்டமாகவும், மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை 2-ம் கட்டமாகவும் நடந்தது. மத்தியமா தேர்வை 307 பேரும், ராஷ்டிரபாஷா தேர்வை 154 பேரும் எழுதினர்.