/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அர்ச்சகர்களின் தட்டுப்பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை: பூம்பாறை கோயிலில் அடாவடி வசூலில் அலுவலர்கள்
/
அர்ச்சகர்களின் தட்டுப்பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை: பூம்பாறை கோயிலில் அடாவடி வசூலில் அலுவலர்கள்
அர்ச்சகர்களின் தட்டுப்பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை: பூம்பாறை கோயிலில் அடாவடி வசூலில் அலுவலர்கள்
அர்ச்சகர்களின் தட்டுப்பணத்தை பறிக்கும் ஹிந்து அறநிலையத்துறை: பூம்பாறை கோயிலில் அடாவடி வசூலில் அலுவலர்கள்
ADDED : அக் 29, 2024 06:57 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அர்ச்சகர்களின் தட்டுபணத்தைப் பறிக்கும் ஹிந்து அறநிலைத்துறை அலுவலர்களின் செயலால் பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.
பழநி முருகன் கோயிலின் உப கோயில்களாக 30-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இதில் கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் அர்ச்சகரின் தட்டில் பக்தர்கள் இஷ்டப்பட்டு செலுத்தும் பணத்தை உண்டியலில் செலுத்த அங்குள்ள ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தரிகளிடம் அடாவடியாக நிர்பந்திக்கின்றனர். அவ்வாறு செலுத்தாதவர்களிடம் கண்டிப்பு காட்டுகின்றனர்.
பக்தர்களின் வருகையை கண்காணித்து அவர்கள் உண்டியலில் பணம் செலுத்த 3 ஊழியர்களை நியமித்து கெடுபிடி செய்வதோடு, இதை சிசிடிவி கேமராக்கள் அமைத்து அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்கின்றனர். பக்தர்கள் விரும்பி தட்டில் பணம் கொடுக்கும் போது அதை பெறும் அர்ச்சகர்கள் பலருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு துன்பப்படுத்தப்படும் அவலமும் தொடர்கிறது.
பக்தர்கள் பணத்தை உண்டியலில் இடவும், நன்கொடையாக பி.ஒ.எஸ்., இயந்திரம் மூலம் செலுத்தவும் அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். கோயிலில் அன்றாட பூஜை, அபிஷேகம் குறித்த அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லாமல் ஹிந்து அறநிலையத் துறை இது போன்று ஈடுபடுவது பக்தர்களை கொதிப்படைய செய்கிறது.
அறிவிப்பு கூட இல்லை
மலேசியா பக்தர் லீலாவதி கூறியதாவது: பூம்பாறை வேலப்பர் கோயிலுக்கு வழிபாட்டிற்கு வந்த போது உண்டியலில் பணம் செலுத்தினேன். தொடர்ந்து அர்ச்சகருக்கும் விருப்பத்தின் அடிப்படையில் பணம் கொடுத்த நிலையில் வாங்க மறுத்து விட்டார். அதே நிலையில் அப்பணத்தை உண்டியலில் அர்ச்சகர் செலுத்தி விட்டார். இது சம்பந்தமான எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. ஹிந்து அறநிலையத்துறையின் இத்தகைய செயல்பாடு வருத்தமளிக்கிறது. கோயில் அர்ச்சகர்களுக்கு கிடைக்கும் இது போன்ற சிறு தொகையை அறநிலையத்துறை பறிப்பது நியாயம் இல்லை. கோயில் வழிபாட்டின் போது அர்ச்சகரின் தட்டில் விபூதி உள்ளிட்டவை பெறும் போது சிறு காணிக்கை செலுத்த வேண்டும் என எனது முன்னோர் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் தான் செலுத்தினேன் என்றார்.
வருத்தம் அளிக்கிறது
கொடைக்கானல் ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் மகேஸ்வரன் கூறிய தாவது : அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் வழங்கும் பணத்தை உண்டியலில் திரும்ப செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள அர்ச்சர்களுக்கு பக்தர்கள் இஷ்டப்பட்டு காணிக்கை அளிக்கும் நிலையில் அதை பறிப்பது நியாயம் இல்லை. தமிழக அரசு பிற மத வழிபாட்டில் தலையீடு செய்வதில்லை. கோயில்களில் இது போன்ற நடவடிக்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற நிலையால் பக்தர்கள் கோயில்களில் காணிக்கை செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர் என்றார்.

