/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தாடிகொம்பு பெருமாள் கோயில் ரூ. பல கோடி சொத்து அபகரிப்பு ஹிந்து முன்னணி புகார்

ADDED : ஆக 06, 2025 08:32 AM
திண்டுக்கல் : தாடிகொம்பு பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ. பல கோடி மதிப்பு கட்டளை சொத்து உரிமத்தை சிலர் தங்களது பெயரில் மாற்றி உள்ளதாக அறநிலையத்துறையிடம் ஹிந்து முன்னணி புகார் அளித்துள்ளது.
ஹிந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் வினோத்ராஜ் அறநிலையத்துறை மாவட்ட அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் மூன்றாம் அவதாரம் கட்டளை சொத்தாக திண்டுக்கல்லில் 1540 சதுர அடி நிலம், கட்டடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தசாவதார உற்ஸவ விழா நிகழ்ச்சிக்கு தேவையான செலவுகளை திருக்கோயில் நிர்வாகிகள் செய்தனர். தற்போது இந்த சொத்து சிலரின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. பல கோடிகள்.கோயில் சொத்தை மீட்டெடுக்க அரசு முன் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.