/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
/
ஹிந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 04, 2024 07:30 AM
திண்டுக்கல்: ஹிந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்ட பொதுக் குழுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சித் குமார், சண்முகம் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் முருகானந்தம், மாநிலச் செயலர்கள் செந்தில்குமார், முத்து குமார், சேவகன் பங்கேற்றனர். மத வெறி அமைப்புகளை ஆதரிப்பதை திராவிட கட்சிகள் தவிர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். திண்டுக்கல் மலைக்கோட்டை கோயிலில், அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

