ADDED : நவ 08, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
வடமதுரை எரியோடு பகுதியில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளிலும், இன்று (நவ.,8) காலையிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் பொது மக்கள், வியாபாரிகள் பரிதவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் வியாபாரம் அதிகம் நடக்கும். இந்நிலையில் மின்தடை அடிக்கடி ஏற்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்தனர். வீடுகளால் பண்டிகைக்காக முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட மக்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இன்று காலையிலும் வடமதுரையின் சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. மின் மாற்றியில் பழுது, பீஸ் பிரச்னை என காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், வீடுகளில் பண்டிகை கால சிறப்பு சமையல் பணிகளில் ஈடுபட்டிருந்த இல்லத்தரசிகள் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட உபகரணங்களை இயக்க முடியாமல் புலம்பும் நிலை ஏற்பட்டது.
