ADDED : மார் 03, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
வத்தலக்குண்டு அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் 35. இவரது மனைவி சிவதர்ஷினி 28. வாடிபட்டியில் வசித்து வரும் இவர்கள் வத்தலக்குண்டில் அலைபேசி கடை நடத்தி வருகிறார்கள். மணிகண்டன் பா.ஜ., வில் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக உள்ளார். நேற்று மாலை இருவரும் வீட்டில் ஒரே சேலையில் துாக்கிட்டப்படி தற்கொலை செய்து கொண்டனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

