/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாதிப்பு: கிராமப்புற ரோடுகளில் தேங்கும் மழை நீர்: சில மாதங்களிலே சாலைகள் சிதலமடையும் அவலம்
/
பாதிப்பு: கிராமப்புற ரோடுகளில் தேங்கும் மழை நீர்: சில மாதங்களிலே சாலைகள் சிதலமடையும் அவலம்
பாதிப்பு: கிராமப்புற ரோடுகளில் தேங்கும் மழை நீர்: சில மாதங்களிலே சாலைகள் சிதலமடையும் அவலம்
பாதிப்பு: கிராமப்புற ரோடுகளில் தேங்கும் மழை நீர்: சில மாதங்களிலே சாலைகள் சிதலமடையும் அவலம்
ADDED : அக் 28, 2025 04:05 AM

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளில் பல இடங்களில் மழை நீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதால் ரோடு அமைக்கப்பட்ட சில மாதங்களிலே சிதைந்து போக்குவரத்திற்கு சிரமம் தருகின்றன.
பெரு நகரங்களை இணைக்கும் வகையிலான நான்கு வழிச்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தாலும், அதற்கடுத்த நிலையில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த ரோடுகள் மாநில நெடுஞ்சாலைத்துறையாலும் பராமரிக்கப்படுகின்றன. இவ்விரு துறைகளின் கட்டுப்பாட்டில் இல்லாத ரோடுகள் அந்தந்த பகுதியை சார்ந்த உள்ளாட்சி அமைப்புகளான ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் பராமரிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக கோடிக்கணக்கான ரூபாய் மாநில அரசால் ஒதுக்கப்பட்டு ரோடுகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் ரோடு அமைந்த பின்னர் அதற்கு நிர்ணியிக்கப்பட்ட ஆயுள் காலம் வரை பராமரிப்பு பணி நடப்பதில்லை. குறிப்பாக தாருக்கும், நீருக்கும் பொருந்தா குணம் இருப்பதால் ரோட்டில் தொடர்ந்து சில நாட்கள் நீர் தேங்கி நின்றாலே ரோடு சிதைந்துவிடும். இவ்வாறு ரோட்டில் தேங்கும் நீரை மண்வெட்டியை பயன்படுத்தி ரோட்டோர மண் பகுதிக்குள் கடத்திவிட்டால் தான் ரோடு பாதிப்படைவதை தடுக்கப்படும். ஆனால் இதுபோன்ற பராமரிப்பு பணி ஏதும் நடக்காததால் பல ரோடுகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலே பெயர்ந்து போக்குவரத்திற்கு அதிக சிரமத்தை தருகின்றன. குறிப்பாக கிராமப்பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலை, ஊராட்சி ஒன்றிய ரோடுகளில் இந்த அவல அதிகம் உள்ளது. ரோடு அமைப்பதுடன் பணி முடிந்தது என்றில்லாமல் மழை நீர் தேங்காமல் பராமரித்தால் ரோடுகளில் ஆயுள் காலம் அதிகரிக்கும். மக்களுக்கு சுலபமான போக்குவரத்து வசதி இருக்கும். மக்களின் வரிப்பணமும் வீணாகாது. மாவட்ட நிர்வாகம் ரோட்டில் நீர் தேங்காமல் பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
..............
-
பள்ளமாகும் ரோடுகள்
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊராட்சி ஒன்றியங்களில் ரோடு பணிக்கென தனி ஊழியர்கள் இருந்தனர். இவர்கள் ரோடுகளுக்கு இடையூறான முட்புதர்களை அகற்றுவர். மரக்கன்றுகளையும் நட்டு பராமரிப்பர். ரோடுகளில் மழை நீர் தேங்காத வகையில் ரோடு விளிம்பில் இருக்கும் மண் திட்டுகளை அகற்றி நீர் வழிந்தோட செய்வர். இதனால் ரோடுகள் மழை நீர் தேங்குவதால் சேதமடைவது தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதுபோன்ற பணிகள் நடக்காததால் ரோடு அமைக்கப்பட்ட சில மாதங்களில் மழை நீரால் பாதிப்படைந்து தார் ரோடு கற்கள் பெயர்ந்துவிடுகிறது. பின்னர் தொடர்ந்து நடக்கும் போக்குவரத்தால் கற்கள் அங்கிருந்து வெளியேறி பள்ளமாக மாறிவிடுகிறது. அடுத்த புதுப்பித்தல் பணி நடக்கும் வரை அப்பகுதியினர் அவதிப்படும் நிலை தொடர்கிறது.
- கே.ஆண்டிவேல்சாமி, அ.தி.மு.க., இலக்கிய அணி நகர செயலாளர்,அய்யலுார்.

