/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் மா.கம்யூ.,க்கு வேண்டா வெறுப்பில் தி.மு.க., பணி
/
திண்டுக்கல்லில் மா.கம்யூ.,க்கு வேண்டா வெறுப்பில் தி.மு.க., பணி
திண்டுக்கல்லில் மா.கம்யூ.,க்கு வேண்டா வெறுப்பில் தி.மு.க., பணி
திண்டுக்கல்லில் மா.கம்யூ.,க்கு வேண்டா வெறுப்பில் தி.மு.க., பணி
ADDED : மார் 16, 2024 06:37 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் தொகுதியில் 2019 தேர்தலில் தி.மு.க.,சார்பில் சிட்டிங் எம்.பி.,வேலுச்சாமி போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறையும் தி.மு.க.,தான் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே சுவர்களில் ஓவியம்,போஸ்டர்கள் என தங்கள் மனதில் உள்ள ஆசையை பிரதிபலித்தனர்.
இதற்கிடையே காங்.,கட்சியினரும் திண்டுக்கல் தொகுதி தங்களுக்கு வேண்டும் என தி.மு.க.,தலைமைக்கு அழுத்தம் கொடுத்தனர். கரூர் சிட்டிங் எம்.பி.,ஜோதிமணியும் இங்கே போட்டியிட விருப்பம் தெரிவித்தார். தி.மு.க.,வினரும் தொகுதியை விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் இருந்தனர்.
தி.மு.க.,தலைமை திண்டுக்கல் தொகுதியை கூட்டணி கட்சியான மா. கம்யூ., க்கு ஒதுக்கியது. இந்த அறிவிப்பு,எப்படியும் தேர்தலில் மாஸ் காட்டலாம் என்ற நினைப்பில் இருந்த தி.மு.க.,வினருக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கட்சி நிர்வாகிகளும் முழு அதிருப்தியில் உள்ளனர். இவர்கள் மட்டுமில்லாமல் காங்.,கட்சியினரும் பல ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்படுவதாக வேதனையில் உள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க மா. கம்யூ.,கட்சியினர் தி.மு.க.,கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் தொகுதியில் கால்பதிக்க முடியும் என அறிந்து தி.மு.க., காங்.,நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைமை மா. கம்யூ.,கட்சியினர் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் திண்டுக்கல்லில் உள்ள தி.மு.க.,கூட்டணி கட்சி தொண்டர்கள் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

