/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வருமானவரித்துறை சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் சிக்கின
/
வருமானவரித்துறை சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் சிக்கின
வருமானவரித்துறை சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் சிக்கின
வருமானவரித்துறை சோதனை நிறைவு முக்கிய ஆவணங்கள் சிக்கின
ADDED : டிச 22, 2024 02:36 AM

ஒட்டன்சத்திரம்,:திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் . ராயர் சிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
டிச.18 காலை மதுரையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 15க்கு மேற்பட்டோர் நிதி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நேற்று முன்தினம் இரவு வரை மூன்று நாட்களாக நடந்தது. முடிவில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றனர்.
இதே போல் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக் கடையில் வருமானவரித் துறையினர் மூன்று நாட்களாக சோதனை நடத்தினர்.
இங்கும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.