/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை வஸ்து அதிகரிப்பு; முகம் சுளிக்கும் குடியிருப்பு வாசிகள் கொடைக்கானல் 20 வது வார்டில் அலங்கோலம்
/
போதை வஸ்து அதிகரிப்பு; முகம் சுளிக்கும் குடியிருப்பு வாசிகள் கொடைக்கானல் 20 வது வார்டில் அலங்கோலம்
போதை வஸ்து அதிகரிப்பு; முகம் சுளிக்கும் குடியிருப்பு வாசிகள் கொடைக்கானல் 20 வது வார்டில் அலங்கோலம்
போதை வஸ்து அதிகரிப்பு; முகம் சுளிக்கும் குடியிருப்பு வாசிகள் கொடைக்கானல் 20 வது வார்டில் அலங்கோலம்
ADDED : செப் 28, 2025 03:15 AM

கொடைக்கானல்: - கொடைக்கானல் நகரின் மையத்தில் உள்ளது 20வது வார்டு.இதில்
இந்திரா நகர், லாஸ்காட் ரோடு உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் ஆர்.டி.ஓ., அலுவலகம். கோடை பண்பலை,ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவை செயல்படுகிறது. வார்டில் சில்லரை மது விற்பனை ஜோராக நடக்கிறது. தெருக்களில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளால் பெண்கள் நடமாட அச்சமடைகின்றனர். சாக்கடை சேதமடைந்து கழிவு நீர் ரோட்டில் ஓடுகிறது. குண்டுகுழியுமான ரோடால் வாகன ஓட்டிகள் மட்டுமன்றி பாதசாரிகளும் அவதிப்படுகின்றனர். குப்பை சரிவர அள்ளப்படாது தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது . தெருவிளக்குகள் எரியாது இருள் சூழ்ந்து கிடக்கிறது . இந்திரா நகரில் சுகாதார வளாகம் பயனற்று உள்ளது. தெருநாயகள் தொல்லையால் இங்குள்ளோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு என ஏராளமான பிரச்னைகள் வார்டில் கொட்டி கிடக்கின்றன.
மது விற்பனை ஜோர் சுப்ரமணி, அ.தி.மு.க., வார்டு செயலாளர் : வார்டில் 24 மணி நேரமும் சில்லரை மது விற்பனை ஜோராக நடக்கிறது. இங்குள்ள ரேஷன் கடை அருகே சமூக விரோதிகள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை பயன்படுத்துவதால் இங்குள்ளோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன . சாக்கடை சேதமடைந்து கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலம் உள்ளது. குப்பை சரிவர அள்ளப்படாமல் சுகாதாரக்கேடாக உள்ளது.தெரு நாய் பிரச்னகளால் குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.
தேவை சிசிடிவி கேமரா சுந்தரமூர்த்தி, தனியார் ஊழியர் : ரோடுகள் சேதமடைந்து குண்டு குழியுமாக உள்ளது. இங்கு வசிக்கும் ஏராளமானவருக்கு பட்டா இல்லாத நிலை உள்ளது. ஆதிதிராவிட நல விடுதி, கோழிப்பண்ணை அருகே குப்பை குவிப்பதால் சுகாதாரக்கேடு உள்ளது. இங்குள்ள சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் பிடியில் உள்ளது. வார்டில் நடக்கும் சமூக விரோத செயல்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.
தெருவிளக்குகள் எரிகின்றன பரிமளா, கவுன்சிலர் (தி.மு.க.,) : சில்லரை மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்த போதும் மக்கள் ஒத்துழைப்பு இல்லை. இருந்த போதும் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் போதை வஸ்துக்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசில் கூறப்பட்டுள்ளது. சாக்கடை ,ரோடு உள்ளிட்டவற்றை கட்டமைக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் முறையாக எரிகின்றன. தெரு நாய்கள் பிரச்னையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியிலும் அமைக்கப்படும் என்றார் .