/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குட்கா புழக்கம் அதிகரிப்பு; புகாரளிக்க அதிகாரிகள் வேண்டுகோள்
/
குட்கா புழக்கம் அதிகரிப்பு; புகாரளிக்க அதிகாரிகள் வேண்டுகோள்
குட்கா புழக்கம் அதிகரிப்பு; புகாரளிக்க அதிகாரிகள் வேண்டுகோள்
குட்கா புழக்கம் அதிகரிப்பு; புகாரளிக்க அதிகாரிகள் வேண்டுகோள்
ADDED : ஆக 28, 2025 05:57 AM
திண்டுக்கல்  :திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு வணிகம் அல்லாத கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது அதிகரித்துள்ளதால் அதுகுறித்து புகார் தெரிவிக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையை தடுக்கும் பொருட்டு தினசரி சோதனைகள் நடத்தி  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில், பான் மசாலா விற்பனை தொடர்பான வழக்குகளில் ஆக. 1 முதல் இதுவரை 127 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி கூறிகையில், 'மாவட்ட உணவு பாதுகாப்பு குழுவினர் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, ஆத்துார், நத்தம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ஆக., 1 முதல் ஆக.,23 வரை நடத்திய சோதனையில், 55 விற்பனைக் கடைகளில் இருந்து கணேஷ், கூல் லிப், வி1 டூபாக்கோ, ஹான்ஸ், ஸ்வாகத் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 127 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர 42 கிலோ குட்கா, ரயில்வே போலீஸால் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது, உணவு வணிகம் அல்லாத குடோன்கள், பாத்திரக்கடைகள், சலுான், மெக்கானிக் கடைகளில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்கின்றனர். அவர்களை, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் உதவியுடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டவிரோத விற்பனை, கடத்தல், பதுக்கல் குறித்து 99439 84071 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டோ, வாட்ஸ் ஆப்பில் போட்டோ, வீடியோ அனுப்பியோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.

