/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுற்றுலாதலங்களில் அனுமதி இன்றி கட்டப்படும் கட்டடங்கள் அதிகரிப்பு: உள்ளாட்சிகள் மவுனம் காப்பதால் இயற்கை வளங்கள் அழிப்பு

ADDED : ஜன 21, 2025 06:25 AM

திண்டுக்கல்,ஜன.21 -திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி அதிகளவில் கட்டடங்கள் கட்டுவதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுகிறது. சம்பந்தபட்ட உள்ளாட்சிகளும்  மவுனமாக இருப்பதால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  இதன்மீது மாவட்ட நிர்வாகம்தான்   கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்க வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து முகாமிடுகின்றனர்.  இங்கு அனுமதியின்றி அதிகளவில் காட்டேஜ்கள்,  கட்டடங்கள் கட்டப்படுகிறது. இதற்கென சம்பந்தபட்ட உள்ளாட்சிகளில் எந்த அனுமதியும் பெறாமல் மலையில் உள்ள வளங்களை அழித்து கட்டுகின்றனர். இதனால்  வழித்தடம் அழிய அவ்வழியில் வரும் விலங்குகள்  வழி தடுமாறி ஊருக்குள் புகுந்து மக்களை தாக்கும் நிலையும் தொடர்கிறது.    மலை பகுதிகளில் அத்துமீறி கட்டும் கட்டடங்களால் பெரும் நிலச்சரிவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இதுதவிர இயந்திரங்கள் மூலம் மலையை குடைந்து பாறைகளை உடைக்கும் சம்பவங்களும் தொடர்கிறது.  இதன்மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் இல்லாமல்  வேடிக்கை பார்ப்பது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
.............
வன விலங்குகள் பாதிப்பு
சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் வன விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன. இப்பகுதிகளை  பலர் விலைக்கு வாங்கி   அனுமதியின்றி  கட்டடங்களை கட்டுகின்றனர். இதனால் வன விலங்குகளில் வழித்தடங்கள் அழிந்து அவைகள் உணவு தேடி குடியிருப்புகள் சுற்றித்திரியும் நிலை ஏற்படுகிறது. காட்டேஜ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நிலையில் இதை மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
கார்த்திக் வினோத், பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர், திண்டுக்கல்.