sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலி ஆவணங்களின் மூலம் பத்திரப்பதிவு  அதிகரிப்பு: அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை

/

போலி ஆவணங்களின் மூலம் பத்திரப்பதிவு  அதிகரிப்பு: அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை

போலி ஆவணங்களின் மூலம் பத்திரப்பதிவு  அதிகரிப்பு: அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை

போலி ஆவணங்களின் மூலம் பத்திரப்பதிவு  அதிகரிப்பு: அவசியமாகிறது துறை ரீதியான நடவடிக்கை

6


ADDED : பிப் 05, 2026 05:41 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:41 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாவட்டத்தில் அரசு ஆவணங்கள் பதிவு செய்தல், சொத்துக்களை விற்பது, வாங்குவது, திருமணப்பதிவு, அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள், சங்கங்கள்,சீட்டு, நிதி நிறுவனங்கள்,பிறப்பு, இறப்பு பதிவு செய்தல் போன்ற பணிகளை செய்திட பத்திரப்பதிவுத்துறை மூலமாக சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல் படுகின்றன.

பதிவுத்துறை அலுவலகங்கள் மண்டல அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகம் என பிரிக்கப்பட்டுள்ளன. சில சார்பதிவாளர் அலுவலகங்களில் குறிப்பாக சொத்துக்கள் வாங்குவது, விற்பது, பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட பத்திரப்பதிவுகள் செய்யும்போது போலி ஆவணங்களை பயன்படுத்தி பத்திரப்பதிவுசெய்வது அதிகமாக உள்ளது.

சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் நேரடியாக ஏதாவது சொத்துக்களை விற்கவோ, வாங்கவோ எண்ணி அதை பதிவு செய்ய முயன்றால் முடியவில்லை. அங்குள்ள அதிகாரிகளே இடைத்தரகர்களை நாட அறிவுறுத்துகின்றனர்.

இடைத்தரகர்கள் சொத்துக்களை விற்பதற்கு தேவையான ஆவணங்கள் இல்லை எனில் அதை போலியாக தயார் செய்து அதற்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பதிவுத்துறை அதிகாரிகளின் உதவியுடன் போலி பத்திரங்களை பதிவு செய்கின்றனர். விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல், குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு டீ.டி.சி.பி., எனும் நகர ஊரமைப்பு இயக்கம் அனுமதி தேவைப் படுகிறது.

24 சென்ட் குறைவான நிலப்பகுதிக்கு ஊராட்சி அனுமதி போதுமானது.

ஆனால் 24 சென்ட் மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் , வீட்டு மனைகளாக பிரித்து விற்க டீ.டி.சி.பி., அப்ரூவல் அவசியம் ஆகும்.

ஆனால் சிலர் ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்களை எந்தவிதமான அரசு அனுமதியும் பெறாமல் முறைகேடாக பத்திரப்பதிவு அலுவலர்களின் உதவியுடன் வீட்டு மனைகளாக பிரித்து பத்திரப்பதிவு செய்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வீட்டு மனைகளை வாங்கும் பொதுமக்களும் பாதிப்பை சந்திக்கின்றனர்.






      Dinamalar
      Follow us