/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்களிடம் அதிகரித்து வருது -ஆன்லைன் மோசடி; எப்படியெல்லாம் ஏமாற்றுறாங்க...!
/
மக்களிடம் அதிகரித்து வருது -ஆன்லைன் மோசடி; எப்படியெல்லாம் ஏமாற்றுறாங்க...!
மக்களிடம் அதிகரித்து வருது -ஆன்லைன் மோசடி; எப்படியெல்லாம் ஏமாற்றுறாங்க...!
மக்களிடம் அதிகரித்து வருது -ஆன்லைன் மோசடி; எப்படியெல்லாம் ஏமாற்றுறாங்க...!
ADDED : ஜூன் 15, 2024 06:47 AM

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. முகம் தெரியாத மர்ம நபர்கள் அலைபேசிக்கு இணைய லிங்க் அனுப்பி பரிசு கிடைத்திருப்பதாக கூறி மக்களின் ஆசையை துாண்டுகின்றனர். இதை தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வங்கி விபரங்களை பெற்றுகொண்டு அதிலிருந்து பணத்தை திருடுகின்றனர்.
தொடரும் இப்பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதோடு மட்டுமன்றி தனியார் வங்கிகளில் லோன் பெற்று தருவதாக கூறி முன்பணம் வாங்கிக் கொண்டு பின் லோன் பெற்று தராமல் ஆன்லைன் மூலம் மோசடி செய்கின்றனர். சில குற்றவாளிகள் குறிவைத்து பெண்களை சுற்றிவளைப்பதும் வாடிக்கையாகி விட்டது. இது தொடர்பாக சைபர் பேலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணாமாக உள்ளது.
போலீசாரும் மக்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கின்றனர். இருந்தும் குற்றவாளிகளை பிடிக்க முடியாததால் குற்றவாளிகளும் தைரியமாக சுற்றுகின்றனர். இது மட்டுமின்றி துணிச்சலாக மற்றவர்களிடமும் மோசடியில் ஈடுபடுகின்றனர். போலீசார் இணைய குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போதிலும் இந்நிலை தொடர்கிறது. குற்றவாளிகள் பெரிய அளவில் இல்லாமல் ஆயிரக்கணக்கில் திருடுவதால் பாதிக்கப்பட்டவர்களும் புகாரளிக்க வர மறுக்கின்றனர்.
ரூ.லட்சங்களை பறிக்கொடுக்கும்போதுதான் போலீசாரை நாடுகின்றனர். மக்களை இணைய குற்றங்களிலிருந்து காப்பாற்ற போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.